சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில காட்சிகள் மட்டுமே நம் மனதை ஆழமாகத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில், வறுமையிலும் ஒரு முதியவர் காட்டிய பெருந்தன்மையும், ஒரு சிறுமியின் மனிதாபிமானமும் கலந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், கிழிந்த ஆடைகளுடன் முதியவர் ஒருவர் சாலையோரம் அமர்ந்திருக்கிறார். முதுமை காரணமாக வளைந்த உடல், சுருங்கிய கண்கள் என மிகவும் ஏழ்மையான நிலையில் உதவி கோரி அவர் கைகளை ஏந்தியபடி இருக்கிறார். அப்போது அங்கு இரண்டு சிறுமிகள் வருகின்றனர்.
அவர்களில் இளஞ்சிவப்பு (Pink) நிற ஜாக்கெட் அணிந்த ஒரு சிறுமி, மிகவும் தயக்கமின்றி அந்த முதியவர் அருகே செல்கிறாள். தனது சட்டைப் பையிலிருந்து 10 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து, மிகுந்த மரியாதையுடனும் புன்னகையுடனும் அந்த முதியவரின் கைகளில் வைக்கிறாள்.
சிறுமி கொடுத்த அந்தப் பணத்தைப் பார்த்த முதியவர், பின் அச்சிறுமியின் முகத்தைப் பார்க்கிறார். வறுமையில் இருந்த அந்த முதியவர், அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளாமல், மீண்டும் அச்சிறுமியின் பையிலேயே அதைத் திணித்து விடுகிறார். சிறுமியின் அந்த நல்லெண்ணமே தனக்குக் கிடைத்த மிகப்பெரிய செல்வம் என்பது போல அவரது முகத்தில் ஒரு அமைதியான புன்னகை தவழ்கிறது.
सड़क किनारे एक बहुत बूढ़े बाबा बैठे थे, उम्र ने कमर झुका दी थी और आँखों में थकान साफ़ झलक रही थी।
भीख के लिए उनका हाथ आगे बढ़ा हुआ था। तभी सामने से एक छोटी-सी बच्ची आई। मासूम चेहरे पर सच्ची दया थी। उसने बड़े प्यार से अपनी जेब से ₹10 निकालकर बाबा जी के हाथ में रख दिए।
बाबा जी… pic.twitter.com/mwErazvemi
— Renu Yadav (@renuy305) February 3, 2026
சிறுமி சிறிது ஆச்சரியத்துடன் அங்கேயே நிற்க, “உன் அன்பு போதும் மகளே” என்று சொல்லாமல் சொல்லும் அந்த முதியவரின் செயல் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. இந்த வீடியோ ‘X’ தளத்தில் @renuy305 என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள், “உண்மையான செல்வம் என்பது சட்டைப் பையில் இல்லை, இதயத்தில் தான் இருக்கிறது” என்றும், “இந்தக் காலத்திலும் மனிதநேயம் உயிர்ப்புடன் இருக்கிறது” என்றும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் சிறுமிக்கு அவளது பெற்றோர் கற்றுக்கொடுத்த நற்பண்புகளும், அந்த முதியவரின் சுயமரியாதையும் இந்த வீடியோவை வைரல் ஆக்கியுள்ளது.
