இன்றைய டிஜிட்டல் உலகில் ‘பியூட்டி பில்டர்கள்’ மூலம் முகத்தை அழகாகக் காட்டி ஏமாற்றுவது அதிகரித்துள்ள நிலையில், சீனாவில் பிரபலமான ஒரு லைவ் ஸ்ட்ரீமிங் வீராங்கனையின் முகமூடி கழன்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் பிரபலமான சமூக வலைதளத்தில் இளம்பெண் ஒருவரின் தோற்றத்துடன் தினமும் நேரலையில் தோன்றி வந்தவர் அந்தப் பெண். தனது வசீகரமான அழகு மற்றும் கொஞ்சும் பேச்சால் ஆயிரக்கணக்கான ஆண்களைத் தனது ரசிகர்களாக வைத்திருந்தார். இவரது அழகில் மயங்கிய ரசிகர்கள், அவருக்குப் பெரும் தொகையையும், விலை உயர்ந்த பரிசுகளையும் வாரி வழங்கி வந்தனர்.
In China, a livestreamer was seducing male viewers with her young beauty filter, getting them to send her gifts & money.
Then, suddenly, the filter glitched off mid-stream, revealing a much older woman underneath.
She lost 140,000 followers in hours. pic.twitter.com/ovSs8izipJ
— WTF (@mrwtffacts) May 11, 2026
வழக்கம்போல ஒருநாள் அந்தப் பெண் நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் பயன்படுத்திய ‘யங் பியூட்டி பில்டர்’ தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்தது. அடுத்த நொடியே, திரையில் தோன்றிய முகம் ரசிகர்களைத் தூக்கி வாரிப் போட வைத்தது. அழகு தேவதையாகப் பேசிக்கொண்டிருந்தவர், உண்மையில் ஒரு நடுத்தர வயதுக்கும் மேலான பெண்மணி என்பது தெரியவந்தது.
தங்கள் கண்களையே நம்ப முடியாமல் திகைத்த ரசிகர்கள், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆத்திரமடைந்தனர். ஒரு சில மணி நேரங்களிலேயே சுமார் 1,40,000-க்கும் மேற்பட்டோர் அவரைப் பின்தொடர்வதை நிறுத்தினர். சமூக வலைதளங்களில் கண்ணால் காண்பது எல்லாம் உண்மையல்ல என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய உதாரணமாக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளைஞர்களைக் கவர்ந்து பணம் பறிக்கும் இத்தகைய மாய உலகத்தைப் பற்றி இணையவாசிகள் தற்போது எச்சரித்து வருகின்றனர்.
