ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் பிணை மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனைச் சுட்டிக்காட்டிய டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா, தனது ‘எக்ஸ்’ தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். “பாம்புகள் நசுக்கப்படுகின்றன, அதனால் குட்டிகள் அலறுகின்றன” என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக முழக்கமிடுபவர்கள், தங்களின் தீய திட்டங்கள் ஒவ்வொன்றாக முறியடிக்கப்படுவதால் தற்போது விரக்தியில் இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜேனு-வில் இத்தகைய தேசவிரோத முழக்கங்கள் எழுப்பப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜே.என்.யு நிர்வாகம் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உள்
