உத்தரப் பிரதேச மாநிலம், ரூரா அருகே உள்ள சரகாவுன் புசர்க் கிராமத்தில், கோதுமை அரைக்கும் மில்லில் அதன் கல் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில், மோஹித் (வயது 15) என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மோஹித் தனது இரண்டு நண்பர்களுடன் கோதுமை அரைக்கச் சென்றபோது, ஓடிக்கொண்டிருந்த மில்லின் கல் பெரும் சத்தத்துடன் வெடித்தது. சிதறிய ஒரு கல் துண்டு மோஹித்தின் தலையில் பலமாகத் தாக்கியதால் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
VIDEO | Uttar Pradesh: School student dies after a flour mill explodes in Kanpur Dehat.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/4IbYChYsK9
— Press Trust of India (@PTI_News) November 8, 2025
“>
மில்லின் உரிமையாளர் விபத்து நடந்தவுடன் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், ஆத்திரமடைந்த மோஹித்தின் பெற்றோரும் கிராம மக்களும் இழப்பீடு மற்றும் மில் ஆபரேட்டர் மீது கடும் நடவடிக்கை கோரி, சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழமையான இயந்திரம், இரும்பு உறை தேய்மானம் மற்றும் அதிக பாரம் காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
