
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு மாவட்டத்திலும் மொத்தம் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று காரைக்கால் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.