தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாட்டிற்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

இதேபோன்று நாளை தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இதனையடுத்து அக்டோபர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆகும் நிலவக்கூடும். மேலும் தென்மேற்கு அரபிக் கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 66 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்  என்பதால் மீனவர்கள் யாரும் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.