தமிழகத்தில் பொதுவாகவே மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடும். அதுவே மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.