உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிறுமி, இன்ஸ்டாகிராம் வழியாக ஒரே வயது சிறுவனுடன் பழகியுள்ளார். அந்த பழக்கம், திடீரென விபரீதத்திற்கு வழிவகுத்துள்ளது.
அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணி அளவில் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், சிறுமி தான் பழகிய சிறுவனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் மாணவி. ஆனால் அதே நேரத்தில், அந்த இளைஞர் மட்டுமல்லாமல், மேலும் மூன்று சிறுவர்களும் அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 9ஆம் வகுப்பு மாணவியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவம் நடக்கும்போது மார்க்கெட்டிற்குப் சென்றிருந்த தாயார், வீட்டிற்கு திரும்பியபோது கதவு திறந்திருந்ததை பார்த்து உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரது மகள் அலங்கோலமாகக் கிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டுள்ளார்.
தன்னுடைய மகளை அந்த அறையிலிருந்து இழுத்து வெளியே தள்ளிய தாயார், உள்ளே இருந்த 5 சிறுவர்களையும் அறைக்குள் பூட்டி வைத்தார். உடனே போலீசாருக்கு தகவல் வழங்கினார். ஆனால், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் சம்பவம் வெளியேறாத வகையில், போலீசார் வருவதற்கு முன்பே அந்த சிறுவர்களை வெளியே அனுப்பி வைத்தனர் என கூறப்படுகிறது. இதனால் வன்மையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கவி நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணையில், குற்றம் செய்த நான்கு பேரில் மூன்று பேர், பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் பள்ளியில் 9, 10, 11ஆம் வகுப்புகளில் படித்து வருகிறார்கள் என தெரியவந்துள்ளது. மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளார். குற்றவாளிகளை கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்விபரீத சம்பவம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை மிக தெளிவாகக் காட்டுகிறது.
