தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக அறுபடை வீடுகளுக்கு சிறப்பு பேருந்து சேவை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அரசு பேருந்துகளில் நான்கு முதல் ஐந்து நாட்களில் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளை சென்னையிலிருந்து புறப்பட்டு திருத்தணி, சுவாமிமலை, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை மற்றும் திருச்செந்தூர் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் பேருந்து சேவை வழங்க ஆலோசனை நடந்து வருகின்றது.