தமிழக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், நடிகர் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அரியணை ஏறுவது உறுதியாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை இயக்குநர் வெங்கட் பிரபு ‘கோட்’ (G.O.A.T) திரைப்படத்திலேயே கணித்துவிட்டதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

அந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில் ‘CM 2026’ என்ற எண் கொண்ட நம்பர் பிளேட்டை வெங்கட் பிரபு பயன்படுத்தியிருப்பார். அன்று வெறும் சினிமா காட்சியாகப் பார்க்கப்பட்ட அது, இன்று நிஜமாக மாறியுள்ளதால் “கணித்த இயக்குநர்… ஜெயித்த தலைவன்” எனப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Siva Prakash Prabhakaran (@sivaprakashlife)

மற்றொரு பக்கம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக வெளியான ஒரு வீடியோவில், நடிகர் ரஜினிகாந்த் முதல்வரைப் புகழ்ந்து பேசியுள்ளார். “ஒழுக்கத்தை விட அணுகுமுறை (Attitude) என்பது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்ட ரஜினி, முதல்வர் ஸ்டாலின் ஒரு வசீகரமான புன்னகைக்குச் சொந்தக்காரர் என்றும், அவர் மென்மேலும் உயர வேண்டும் என்றும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.