எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை நிலை நிறுத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி தடையால் அரிசியின் விலை உலக அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அரிசி வர்த்தகர்கள் இதன் மூலம் அதிக லாபம் பெறுவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் இந்தியாவின் அரிசி  ஏற்றுமதி தடையால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் உணவுக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், பலவகையான அரிசிகளை பல வழிகள்  மூலமாக இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களுடன் உணவு கழகம் இணைந்து செயல்படுகின்றது. அதேபோன்று அரிசி ஏற்றுமதி தடையிலிருந்து இந்திய அரசு சிங்கப்பூருக்கு விலக்கு  அளிக்கவேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளது.