
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த EPS, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது எனவும் 25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.