
கடலூர் மாவட்டத்தில் உள்ள இடைச்செருவாய் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சாந்தி என்ற ஆசிரியர் தன்னுடைய சக ஆசிரியரான சிவகுமார் என்பவர் ஜாதி பெயரை சொல்லி தன்னை தகாத வார்த்தைகளில் திட்டினார் என்று மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் கடந்த வருடம் புகார் அளித்திருந்த நிலையில் சிவகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சிவகுமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆசிரியர் சிவகுமார் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகாரை மாநில மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் ஒருமுறை விசாரிக்க வேண்டும். மேலும் ஆசிரியர் மீது அதுவரை எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.