பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த கால சேவையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் சுகாதார சேவை ஆட் சேர்ப்பு மற்றும் சேவை நிபந்தனை திருத்த விதிகளின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான சம்பள விகிதத்தில் புதிய ஊதிய விகிதம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனத்தில் ஊதியம் பாதுகாப்பின் பலன்கள் வழங்கப்படும் எனவும் மாநிலத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆள்சேர்ப்பு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டால் அந்த ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் சாதாரண ஆசிரியர்களை விட அதிகமாக இருக்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது