இந்தியாவில் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஏழை விவசாயிகளுக்கு வருடத்திற்கு மொத்தமாக 12 ஆயிரம் ரூபாய் உதவி தொகை கிடைக்கும் படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு கூடுதலாக முதலமைச்சர் கிசான் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக நிதி உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு முதலமைச்சர் கிசான் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் ரூபாய் 6 ஆயிரம் ரூபாய் என மொத்தம் வருடத்தில் மட்டும் 12 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது