கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் விளைவால் கடந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 11 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் கூறியுள்ளார். CAG அறிக்கை குறித்து அவர், அதிமுக ஆட்சியின் போது 3% மாணவர்கள், அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் கல்வித்துறையில் வீண் செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.