உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் நகரில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கைஷ் கான் மீது அரசு நிலம் ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் இடத்தை அபகரித்தல்   உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவர்  ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற நீதிமன்றத்தின் நிபந்தனை இருந்த நிலையில், அவர் திடீரென மறைந்துவிட்டது போலீசாரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரது உறவினர் வீட்டில் பதுங்கியுள்ளார் என்ற தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பரணில் பதுங்கி இருந்த கைஷ் கானை அலட்சியமாக தூக்கி வெளியே இழுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட பலரும், “முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் இவ்வாறு பதுங்குவது வேடிக்கையா இருக்குது…” என விமர்சிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Informed Official (@informedofficial)

“>

இந்நிலையில், அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். “பிரபல அரசியல் தலைவராக இருந்த அவர்  இப்படி கைது செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது” என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.