இன்றைய டிஜிட்டல் உலகில் வேலைகள் அனைத்துமே ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அவசியமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது துணை செயலாளர்கள் போன்ற பதவியில் இருப்பவர்கள் மொபைல். லேப்டாப் அல்லது அது போன்ற மின்னணு சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் 40 சதவீதம் அதிகமான மேக் இன் இந்தியா சாதனங்களுக்கு விலை உச்சவரம்பு 1.30 லட்சமாக இருக்கும். அலுவலகத்தில் அதிகாரிக்கு ஒரு சாதனம் வழங்கப்படும். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் வரை புதிய சாதனம் எதுவும் வழங்கப்படாது.  நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அந்த அதிகாரி தனக்கு வழங்கப்பட்ட சாதனத்தை தனதாக்கி  கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.