நாடு முழுவதும் சமீபத்தில் தான் 2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ரூ.500 ரூபாய் நோட்டை நிறுத்துமா என்று நிதியமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. முன்னதாக ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. இவற்றை மாற்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது.

மேலும் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பெரிய நோட்டுகளை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.