இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்ட சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தடை உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அரசு விளக்கமளித்துள்ள நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையால் மாநிலத்திற்கு 54 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளது.

இப்படியான நிலையிலும் கூட அரசு தன்னுடைய சொந்த வருவாயை உயர்த்திக் கொண்டு தான் உள்ளது. இதனை வைத்து அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மசோதாக்களை நிறைவேற்றுவதில் எந்த தடையும் இருக்காது என அரசு உறுதியளித்துள்ளது. மாநில அரசின் நிலுவையில் உள்ள பங்கை விடுவிக்க கோரி தொடர்ந்து கோரிக்கை வைத்தாலும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்த செலவிடப்படும் தொகையை கடனாக பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது