இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் மற்றும் ஜியோ இடையே சமீப காலமாக கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இந்தியாவில் 25 மாநிலங்களில் 514 நகரங்களில்Reliance JioAirFiber சேவை கிடைக்க உள்ளதாக நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 115 நகரங்களில் சேவையை அறிமுகம் செய்தது.

தற்போது JioAirFiber சேவை ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், அசாம், சத்தீஸ்கர், டெல்லி, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், கேரளா, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மிசோரம், மகாராஷ்டிரா, ஒடிசா, நாகாலாந்து, தமிழ்நாடு, ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா, உத்தரகண்ட், உத்தரபிரதேசம் , மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய பகுதிகளில் இந்த சேவை கிடைக்கிறதா என்று ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.