இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட upi செயலிகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் பண பரிவர்த்தனை செய்யும் கூகுள் பே செயலியில் பயனர்களை கவர்வதற்காக புது புது அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது கூகுள் பே-வில் கால் பேசும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக நாம் பணம் அனுப்பும் நபரிடம் நேரடியாக பேச முடியும். இதனால் அதிக அளவில் மோசடிகள் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.