
தெலுங்கானாவில் ஊழியர்களின் சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான பணம் எல்லாம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் இருந்து கழிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா அரசு ஒவ்வொரு மாதமும் அறக்கட்டளைக்கு சமமான பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் இதன் மூலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இலவசமாக மருத்துவ காப்பீட்டை பெற முடியும். எனவே இனிவரும் நாட்களில் தெலுங்கானா அரசு ஊழியர்களின் சுகாதாரத் திட்டத்திற்காக சிஇஓ ஒருவரை நியமிக்கும் எனவும் புதிய பணியாளர்களின் சுகாதார திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.