இந்தியாவில் எரிவாயு சிலிண்டரின் விலை அண்மையில் 300 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் சிலிண்டர் பயனர்கள் அனைவரும் மாதந்தோறும் குறைவான விலையில் சிலிண்டரை வாங்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மானிய விலையில் இன்னும் குறைவாக சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை கருதி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விபத்துக்களை தடுக்கும் விதமாக வீட்டு பயன்பாடு சிலிண்டரை போலவே வணிக சிலிண்டருக்கும் பாதுகாப்பான புது ரெகுலேட்டரை அறிமுகம் செய்துள்ளது.

அதே சமயம் உயர் அழுத்த மாறுபாட்டை தாங்கும் வகையிலான திறன் கொண்ட ரெகுலேட்டர்களையும் ரப்பர் குழாய்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் விநியோகம் செய்யவும் முன்பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் சிலிண்டர் கிடைக்கும் என்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.