
அரியலூர் மாவட்டம் தேளூர் என்னும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று பள்ளி நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதத்தில் ஆய்வகத்தில் இருந்த கணினி ஒன்று வெடித்தது. இந்த விபத்தால் பள்ளியின் ஒரு பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது.
இதை தொடர்ந்து 19 மாணவர்களுக்கு புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காவல்துறையினர் மாணவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர்.