நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதனையொட்டி, திமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சீமானின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தாய்மாமன் முறையில் சீர் வரிசைகளை எடுத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மாற்று அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சர், சீமான் வீட்டு விசேஷத்திற்குச் சீர் எடுத்துச் சென்ற இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களையும், சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தான் ஏன் சீமான் வீட்டுக்குத் தாய்மாமன் சீர் எடுத்துச் சென்றேன் என்பது குறித்தும், அதற்குப் பின்னால் இருக்கும் நட்பு குறித்தும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்து அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
