மேற்காசிய பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அதன் தாக்கம் காரணமாக, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பொட்டாஷ் உரத்தின் விலை மூட்டை ஒன்றுக்கு 1,850 ரூபாயிலிருந்து 2,250 ரூபாயாகவும், காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை 1,550 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாகவும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதுமட்டுமன்றி, விவசாயத்தின் அடிப்படை தேவைகளான யூரியா மற்றும் சல்பேட் உள்ளிட்ட மற்ற உரங்களின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதால், உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்று எண்ணி தமிழக உழவர்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
