அரசு அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்கித் தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரிடம் ரூ.9 லட்சம் மற்றும் நில ஆவணங்களை மோசடி செய்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கலைவாணி மீது பகீர் புகார் எழுந்துள்ளது.
சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (73) என்ற முதியவரிடம், அமைச்சர் தென்னரசுவின் பெயரைப் பயன்படுத்தி கலைவாணி இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பணத்தையும் சொத்து ஆவணங்களையும் இழந்து தவித்த விஸ்வநாதன், இதுகுறித்து படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த முதியவர் விஸ்வநாதன், எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மோசடி செய்த தவெக நிர்வாகி கலைவாணி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
