செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்ட புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் என்பவர் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், விஜயகுமாருக்கு மீண்டும் அதே பதவியை வழங்க வலியுறுத்தி, தவெக தொண்டர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று முறையிடாமல், வேலூர் ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால் அங்கிருந்த அதிகாரிகள் பெரும் குழப்பமடைந்தனர்.
இதற்கிடையே, இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்ட பெண்கள் பலருக்கு, தாங்கள் எதற்காக இங்கு வந்து நிற்கிறோம் என்றே தெரியாததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.
