சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் தம்பியும், பாஜக நிர்வாகி அபர்ணா யாதவின் கணவருமான பிரதீக் யாதவ் (36), லக்னோவில் காலமானார்.

இன்று அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தாவின் மகனான பிரதீக் யாதவ், அரசியலில் ஈடுபடாமல் தொழிலதிபராகவும் உடற்பயிற்சி ஆர்வலராகவும் இருந்து வந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், நுரையீரலில் ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக (Pulmonary Thromboembolism) இதயம் மற்றும் சுவாசம் செயலிழந்ததே மரணத்திற்கு முக்கியக்

அவரது மரணம் குறித்து வெளியான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது உடலில் மரணத்திற்கு முந்தைய 6 காயங்கள் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலுக்கு அகிலேஷ் யாதவ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். யாதவ் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் இழப்பு உத்தரபிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.