தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணியைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும்  கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தி வருகிறது. தவெக-வின் கூட்டணி குறித்துப் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ், அரசியல் கட்சிகள் சரியான நேரத்தில் கூட்டணி அமைக்கும் முடிவை எடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அரசியல் கட்சிகளை லேசாக எடைபோட வேண்டாம். எப்போது கூட்டணி வைக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார். மேலும், அந்த வகையில், “விரைவில் மற்ற கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும்” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். தவெக-வின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.