தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள விஜய்க்கு, இந்த விவாகரத்து வழக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சங்கீதா முன்வைத்துள்ள ‘திருமணத்தை மீறிய உறவு’ என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது விஜய்யின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும்.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை விரைவில் தொடங்க உள்ள நிலையில், விஜய் தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் அளிக்கப்படப் போகிறது என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. குடும்பப் பிரச்சனை இப்போது பொதுவெளியில் அம்பலமாகியுள்ளதால், விஜய்யின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
