பாம்பு அல்லது மலைப்பாம்பு என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் உடல் நடுங்கும். அதிலும் மழைக்காலத்தில் இவற்றின் நடமாட்டம் மிக அதிகமாகவே இருக்கும். தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு ராட்சத மலைப்பாம்பு, வாத்து ஒன்றை மிகக் கொடூரமாக வேட்டையாடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. பொதுவாக மலைப்பாம்புகள் தன் இரையை நேரடியாகத் தாக்காமல், முதலில் அதைத் தன் உடலால் இறுக்கிப் பிடித்து மூச்சுத் திணறச் செய்து கொல்லும். அதன் பின்னரே அதை முழுமையாக விழுங்கும். இந்த வைரல் வீடியோவிலும், மலைப்பாம்பு ஒன்று வாத்தைக் கொன்று, பின்னர் அதை அப்படியே முழுதாக விழுங்கும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த பயங்கரமான சம்பவம் நவி மும்பை பகுதியில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
https://www.instagram.com/reel/DaSjOliBP8w/?igsh=MXVzb3BobmE3bG13eg==
மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த அந்த ராட்சத மலைப்பாம்பு, அங்கிருந்த ஒரு கிணற்றின் அருகே அமர்ந்திருந்த வாத்தைத் தாக்கியுள்ளது. வாத்தின் கழுத்தை நெரித்துக் கொன்ற பிறகு, அதை மெதுவாக விழுங்கிவிட்டு அசையாமல் அமைதியாகக் கிடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு மீட்புக் குழுவினர் (Rescue Team), அந்த மலைப்பாம்பைப் பிடிக்க முயன்றனர். அப்போது, ஆபத்தை உணர்ந்த மலைப்பாம்பு தான் விழுங்கிய வாத்தை அப்படியே தன் வாயிலிருந்து வெளியே கக்கியது.
நிபுணர்களின் கூற்றுப்படி, மலைப்பாம்புகள் தங்களுக்கு ஆபத்து நேரிடும்போதோ அல்லது கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போதோ, எளிதாகத் தப்பித்து ஓடுவதற்காகத் தாங்கள் விழுங்கிய இரையை மீண்டும் வெளியே துப்பிவிடும். அதன்படியே இந்த மலைப்பாம்பும் வாத்தை வெளியே துப்பியவுடன், மீட்புக் குழுவினர் அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாகப் பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர். இச்சம்பவம் குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லட்சக்கணக்கானோரை உரைய வைத்துள்ளது.
