அயோத்தியில் மசூதியை இடித்து கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அயோத்தி ராமர் கோயில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”திமுகவினர் எந்த மதத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் கிடையாது.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அங்கு இருந்த மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில்தான் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்றார்.