நடிகை மீனா அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மீனா பங்கேற்றார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மீனா பாஜக தலைவர்களுடன் அரசியல் ரீதியாக சந்திப்பு நடத்தி வருவதால், அவர் கட்சியில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் உண்மை உள்ளதா என்பதை அறிய சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். ஏற்கனவே நடிகை குஷ்பு, நமீதா உள்ளிட்டோர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.