
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தாய் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இரவு வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துவிட்டு மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்று சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் இறங்கினர். இதனிடையே ஜோத்பூரில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் இரண்டு நபர்கள் பேச்சுக் கொடுத்து தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமி குறித்து மருத்துவமனையில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்தவர்கள் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து இருவரை கைது செய்துள்ளனர்.