மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் இரண்டு குழந்தைகளை அவர்களின் தாயே விட்டுவிட்டுச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. கன்ஹா மற்றும் காளி என்ற பெயருடைய அந்தக் குழந்தைகள், ஒரு பெண் போலீஸ் அதிகாரியுடன் காவல் நிலையத்தில் அமர்ந்திருக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

விசாரணையின் போது, தங்கள் தாய் போதைக்கு அடிமையாகிவிட்டதால் தங்களை விட்டுவிட்டுச் சென்றதாக குழந்தைகள் கூறியுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவத்திற்குக் காரணம் நிதி நெருக்கடி அல்லது மன அழுத்தமாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். இருப்பினும், தாயின் இந்தச் செயல் மனிதத்தன்மையற்றது என்று கூறிப் பல சமூக ஊடகப் பயனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by MAHABHARAT PATH KRISHNAKANT MENARIYA (@mahabharat_path)

“>

இதையடுத்து, பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், அந்தக் குழந்தைகள் குழந்தை நலக் குழுவிடம் (CWC) ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் தாயாரைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம், வறுமை, மோசமான சூழ்நிலைகள் அல்லது உறவுகளின் அலட்சியம் காரணமாகப் பாதிக்கப்படும் எண்ணற்ற குழந்தைகளின் வலியை எடுத்துக்காட்டுகிறது.

குழந்தைகளின் கவலை நிறைந்த முகபாவனைகள் அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு விரைவில் பாதுகாப்பான அடைக்கலம் கிடைக்கும் என்றும், அவர்களின் வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.