கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யஷ். இவர் கன்னட சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ஜம்பட ஹூடுகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு கேஜிஎப் திரைப்படம் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி வசூல் சாதனை புரிந்தது. இதனால் நடிகர் யஷ் உலக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் கேஜிஎப் நாயகன் யஷ்-ஐ சந்திப்பதற்கு அவருடைய வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக நடிகர் யஷ் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் நடிகர் யஷ்ஷுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.