சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர்தான் அனிதா சம்பத். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தின் ஹீரோயின் அனுபோல மனைவி வேண்டும் என்று தற்போது சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பலரும் பேசி வருகிறார்கள்.

இதற்கு அனிதா சம்பத் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணும்னு நினைக்கிறவங்க அம்புட்டு பயலும் கேடி பசங்க, நான் என்ன பேசினாலும் அவளோட விருப்பத்தை சொல்லாம நாம சொல்றதை மட்டும் மூடிக்கிட்டு கேக்குற பொண்ணு வேணும் என்று சொல்வதற்கு பதிலாக ஷார்ட்டாக அனு மாதிரி பொண்ணு வேணும் என்று சொல்றாங்க என அனிதா சம்பத் பகிர்ந்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.