உத்திரபிரதேச மாநிலத்தில் அமைச்சர் தினேஷ் கார்த்திக் வீட்டிற்கு முன்பாக சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பரபரப்பான சாலையில் கடைகள் பல இருந்த நிலையில் வாகனங்கள் அங்கும் இங்கும் ஆக சென்று கொண்டிருந்தது. அந்த முதியவர் சாலை ஓரம் நடந்து கொண்டிருந்த நிலையில் அங்கு மேய்ந்து  கொண்டிருந்த காளைமாடு ஒன்று எதிர்பாராத விதமாக முதியவரை முட்டி தூக்கியது.

அந்த காளை மாடு தன் கொம்புகளால் முட்டி முதியவரை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சாலையில் மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் ஐசியூவில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.