சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் தீர்ப்பு வந்த உடனே பொன்மொழியின் எம்எல்ஏ பதவி பறிபோனதால் அமைச்சராக நீடிக்க முடியாது. இதனால் நேற்று அவரின் காரில் இருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டு விட்டது. அவர் விரைவில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்குவது மட்டும் தான்.