தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை, கோவை, கரூர் உட்பட 50-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதோடு கரூரிலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இந்த திடீர் சோதனையால் தி.மு.க-வினர் கலக்கத்தில் இருக்கின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அண்மையில் அடுக்கடுக்காக புகார்கள் வந்தது. டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், பார் டெண்டர் முறைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் ஐடி ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வேலைவாய்ப்பு பண மோசடி குறித்த வழக்கில் புது விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த admk ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.