தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இந்நிலையில் SSLC தேர்வு எழுதிய மாணவர்கள் இன்றுமுதல் (மே 26) தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அடுத்தக்கட்ட படிப்பு சேர்க்கைக்காக பள்ளிக்கல்வித் துறை இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும், தேர்வுத் துறை இணையதளத்திலும் (www.dge.tn.gov.in) சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.