
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ள வரி குறித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் சில அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100% அளவிற்கு வரி விதித்துள்ளது.
தொடர்ந்து இதேபோன்று இந்தியா அதிக வரி விதித்தால் நாங்களும் அதே அளவு வரியை விதித்து பழிக்குப் பழி திட்ட அணுகுமுறையை செயல்படுத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சமயத்தில் வரி தொடர்பாக ட்ரம்ப் எச்சரித்திருப்பது பலர் கவனத்தை பெற்றுள்ளது.