உலகையே உலுக்கிய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன், அதிகார மட்டத்தில் எப்படியெல்லாம் செல்வாக்கு செலுத்தியுள்ளார் என்பது குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அமெரிக்க வர்ஜின் தீவுகளில் உள்ள தனது தனித்தீவிற்கு (Little Saint James) எந்தவிதத் தடையும் இன்றி சென்று வர, அங்கிருந்த அமெரிக்கச் சுங்கத்துறை அதிகாரிகளையே எப்ஸ்டீன் விலைக்கு வாங்கியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
வெறும் பணக்காரர்களை மட்டுமல்ல, விமான நிலைய அதிகாரிகளுக்கும் விதவிதமான சாப்பாடு, இலவச ஹெலிகாப்டர் பயணம் மற்றும் நிதி ஆலோசனைகளை அள்ளி வீசி அவர்களைத் தனது “கைக்குள்” வைத்திருந்துள்ளார்.
இதற்கு கைமாறாக, அந்த அதிகாரிகள் எப்ஸ்டீனை எந்தவிதச் சோதனையும் இன்றி “விஐபி” போல அனுப்பி வைத்ததுடன், விமான நிலையங்களில் அவர் சிக்கிக் கொள்ளும்போதெல்லாம் தாராளமாக உதவி செய்துள்ளனர்.
சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய எப்ஸ்டீன், தனது அதிகார பலத்தால் இத்தனை காலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்திருப்பது தற்போது உலக நாடுகள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
