மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வரும் போர்ப் பதற்றத்தின் காரணமாக, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டு, கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, எரிசக்தி பற்றாக்குறை உண்டாகும் சூழல் உருவானது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் மீறி, இந்தியாவிற்கு நிதியுதவியாகவும் ஆதரவாகவும் ஈரான் மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியிலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அங்கிருந்து ஒரு பிரம்மாண்ட கப்பல் பாதுகாப்பாகப் புறப்பட்டு இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளது.
மேலும் ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெயைச் சுமந்து கொண்டு ‘கார்லோஸ்’ என்ற சூயஸ்மேக்ஸ் ரக டாங்கர் கப்பல் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து ஓமன் வளைகுடாவை அடைந்துள்ளது. தற்போது அரபிக்கடல் வழியாக இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த கப்பல், இந்தியாவில் நிலவும் கடுமையான கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டுக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவுடனான 12 வார காலப் போரின் காரணமாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் ஒரு போர்க்களமாக மாற்றியிருந்தாலும், இந்தியாவின் மீதான நட்புறவின் காரணமாக இந்த கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாகக் கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
