அமெரிக்காவில் ராப் பாடகி கார்டி பி என்பவரின் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவர் மேடையில் நின்று கொண்டு நடனமுடன் பாடி கொண்டிருந்தார். கச்சேரி பார்க்க அதிக ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில் அதில் ஒருவர் பாடகி கார்டி மீது குளிர்பானங்களை வீசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாடகி தன் கையில் வைத்திருந்த மைக்கை அந்த கும்பல் மீது வீசி உள்ளார்.  இதையடுத்து அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பாதுகாவலர்கள் குளிர்பானத்தை வீசியவர்களை தனியாக அழைத்து சென்று விட்டனர். அமெரிக்காவின் வேல்சில் கடந்த மாதம் நடந்த கார்டியின் கச்சேரியில் அவர் மீது ரசிகர்கள் பூங்கொத்தை வீசி எறிந்தது குறிப்பிடத்தக்கது.