மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் உள்ள கிப்ட் சிட்டியில் மது அருந்துவதற்கு அந்த மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது சர்வதேச நிதி சேவை மையமாகவும் கருதப்படுகிறது. ஆரக்கிள், சைரில், பேங்க் ஆப்அமெரிக்கா, சிட்டி பேங்க் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் இந்த கிப்ட் சிட்டியில் அமைந்துள்ளன.

மேலும் இங்கு விரைவில் உலகளாவிய மாநாடு ஒன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாகவே அங்குள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்கள், கிளப்களில் மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.