திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. நேற்று முன்தினம் முதல் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்வதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அமண லிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அமராவதி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆற்றங்கரை மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்