
விக்கெட் எடுத்த பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் கொண்டாடுவது பற்றி ரிங்கு கேள்வி கேட்க அதற்கு அவர் பதிலளித்துள்ளார்..
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என கைப்பற்றியுள்ளது. எனவே 3வது டி20 போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அவர் 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது அபாரமான ஃபார்மில் இருக்கிறார். இதற்கிடையில், விக்கெட்டை வீழ்த்திய பிறகு ரவி பிஷ்னோய் வித்தியாசமான கொண்டாட்டம் செய்கிறார். இந்த கொண்டாட்டத்தை பார்த்த பிறகு பாகிஸ்தான் வீரர்களான ஷாஹித் அப்ரிடி மற்றும் ஷாஹீன் அப்ரிடி நினைவுக்கு வருகின்றனர்.
ஏனென்றால், இவர்கள் இருவரும் அப்படித்தான் செய்வார்கள்.. அதன்படி விக்கெட் எடுத்த பிறகு, அஃப்ரிடியைப் போல ரவி விஷ்னோய் தனது கால்களை V வடிவத்தில் இருபுறமும் நீட்டினார். பிஷ்னோய் ஏன் இப்படி ஒரு கொண்டாட்டம் செய்கிறீர்கள் என்று இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை ஒப்பிட்டு அணியின் சக வீரர் ரிங்கு சிங் கேலி செய்தார்.. ஏனெனில் படத்தில் நடிகர் ஷாருக்கான் 2 கையையும் விரித்து ஸ்டைலாக செய்வார். இது பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்..
ரவி பிஷ்னோய் மற்றும் ரிங்கு இடையேயான கலந்துரையாடலின் வீடியோவை பிசிசிஐ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. இதில் ரிங்கு சிங், ரவி பிஷ்னோயிடம் விக்கெட் எடுத்த பிறகு கையை விரித்து கொண்டாடுவது ஏன்? அப்போது ரவி பிஷ்னோய் இந்தக் கேள்விக்கு பதிலளித்தார். “ஒவ்வொருவரும் கொண்டாடும் விதம் உண்டு. ஆனா எனக்கு அப்படி எதுவும் இல்லை. அதனால் நான் நினைத்தேன், ‘நான் பெறும் விக்கெட்டுகளுக்கு என் கையை விரித்து ஏன் கடவுளுக்கு நன்றி சொல்லக்கூடாது? கையை விரித்து கொண்டாட ஆரம்பிச்சேன். ஏனென்றால் விக்கெட்டுகள் மேலிடத்தின் அருளால் மட்டுமே கிடைக்கும். அவருக்கு நன்றி” என்றார்.
மேலும் இந்த பதிலுக்கு பின் ரிங்கு சிங் சிறப்பு அறிவுரை வழங்கியுள்ளார். ரிங்கு கூறுகையில், “ஷாருகானும் (SRK) அப்படித்தான் செய்கிறார். அவரைப் போல செய்ய முயற்சி செய்யுங்கள் என்றார்.. பின் ரவி பிஷ்னோய் ‘ அடுத்த முறை நான் விக்கெட்டை எடுக்கும்போது ஷாருக்-ஐ சிறப்பாக பின்பற்ற முயற்சிப்பேன்.என்றார். ரவி பிஷ்னோய் அடுத்த முறை விக்கெட் எடுக்கும் போது ஷாருக் போல் கொண்டாடி ரிங்குவின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.
The joy of maiden Player of the Match award 😃
Unconditional love from the fans 🤗
Secret behind wicket celebration 🙌In conversation with Dublin Stars @rinkusingh235 & Ravi Bishnoi 👌👌 – By @RajalArora
Full Interview 🎥🔽 #TeamIndia | #IREvINDhttps://t.co/SsCfxMcNBo pic.twitter.com/mcZMhBbJ8d
— BCCI (@BCCI) August 21, 2023